Sunday, July 02, 2006

கவிதைத்தோழியே........



















ஏய்..... உன்னவள் உனக்கானவளாய் ஆகி விட்ட பிறகு என்னை மறந்து விட்டாயே என்று சிணுங்கிய என் கவிதைத்தோழிக்காக....



ஏ கவிதைத்தோழியே........

சாமனியனாய் இருந்த என்னை கவிஞன் ஆக்கியது அவள்.....

அவள் கடைக்கண் பார்வை என்னை கடந்த பொழுது என் உணர்வுகளில் ஊறியவள் நீ...

அவள் இதழ்கள் என்னைப் பார்த்து புன்னகைத்த பொழுது என் உயிருக்குள் ஊற்றெடுத்தவள் நீ.....

அவள் நினைவுகளே உன் சாராம்சம்......

அவள் சிரிப்பு உந்தன் நயம்.......

அவள் இயல்பே உந்தன் உவமைப்பொருள்......

அவள் மூச்சுக்காற்று என்னை தீண்டும் நேரத்தில் என் சுவாசக்காற்றாய் வெளிவர இருப்பவள் நீ.....

அவள் என் காதலி.... ஆனால் நீயல்லவா அவளுடைய காதலி???

உனக்கும் எனக்குமான உறவுக்கு உயிர் கொடுப்பவள் அவள்......

எனவே என் கவிதையே என்னவளின் பால் ஒருபோதும் கோபம் கொள்ளாதே.........