Friday, June 30, 2006

கண்ணீர் துடைக்க.....


என்னவளே!!!

என் மரண ஊர்வலத்தில் வந்து ஒருபொழுதும் அழுது விடாதே

என்னையும் அறியாமல் என் கைகள் நீண்டு வந்து விடும் உன் கண்ணீரை துடைப்பதற்கு..........

இதயத்தில் ஒரு உறக்கம்...


இதயத்தில் ஒரு உறக்கம்........

ஒருவர் ஒரு அறையில் தான் உறங்க முடியும் இந்த நிஜ உலகத்தில்...........

என்னவளோ நான்கு அறைகளில் உறங்கி கொண்டு இருக்கிறாள்..

என் இதயமெனும் நிழல் உலகத்தில்....

காதல் உலகம்.......


காதல் உலகம்.......

இந்த பிரபஞ்சத்தின் அளவாய் என்னை விரிவாக்க முற்பட்டுக் கிடந்தேன்........ இப்பொழுது எனது அளவுக்காய் இந்த பிரபஞ்சத்தை சுருக்க முயற்சிக்கின்றேன்.........

ஆம்......... எனக்குள் அவள்........ காதலுக்குள் நான்.........

உரையாடல்......


உரையாடல்......

நீ ஒரு தேவதை என்றேன்.......

எனக்குத்தான் சிறகுகள் இல்லையே என்றாய்.......

நான் சிரித்தேன்......

நீ ஒரு நிலவு என்றேன்......

மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து போவேன் என்றாய்....

நான் சிரித்தேன்......

நீ ஒரு கவிதை என்றேன்......

எனக்கு அடி சீர் விருத்தமெல்லாம் ஒத்து வராது என்றாய்.....

நான் சிரித்தேன்......

நீ என் காதலி என்றேன்.........

என்ன உளறுகிறாய் என்று கேட்டு விட்டு.... நீ சிரித்தாய்........

நான் சிதறினேன்....