கடைசி ஆசை.......
மரத்தின் மீது சாய்ந்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் சசி. நெருங்கி வந்த உயர்ந்த மனிதன் சசியின் தோளில் கை வைத்துக் கேட்டான்,
என்ன சசி இங்க நின்னுட்டு இருக்கீங்க??
சும்மாதான் சார், சரி ஆரம்பிக்க எவ்வளவு நேரம் சார் ஆகும்??
ஒரு அரை மணி நேரம் ஆகும்னு நெனக்கிறேன் சசி, ம்ம்ம்ம்.... சரி உங்க கடைசி ஆசை என்ன சசி? என்ன கேக்க போறீங்க???
அதான் சார் யோசிச்சிட்டுருக்கேன் .... என் அனன்யாவுக்காக தான் எதாவது கேக்கனும்.....
உங்க கடைசி ஆசை ௯ட அவங்களுக்காக தானா???
ஆமா சார், என் வாழ்க்கை, எண்ணங்கள் எல்லாமே அவதான் சார்.இந்த உலகத்துல என்னைய முழுசா புரிஞ்சுகிட்ட ஒரே ஜீவன்னா அது அவ மட்டும் தான் சார். அதுனால என்னோட கடைசி ஆசை ௯ட அவளுக்காக தான்.
சசி, உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்கள மாதிரி ஒருத்தர் கெடச்சதுக்கு அவங்க ரொம்பவே குடுத்து வச்சிருக்கணும்........
புன்னகைத்தான் சசி... பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த தடித்தவர் வந்து சொன்னார் " சார் எல்லாம் ரெடி ஆயிருச்சு"
அப்படியா, மேடை ரெடி ஆயிருச்சா???
ஆமா சார் ரெடி ஆயிருச்சு
ம்ம்..... வாங்க சசி போகலாம்.
மூவரும் நடக்கத் தொடங்கினார்கள்.......
.
.
.
.
.
ஸ்டார்ட் கேமரா,.. ஆக்ஷ்சன்.....
அந்த உயர்ந்த மனிதன் பேச தொடங்கினான் " Welcome Back Viewers, This is Prajin from kalakkal TV's "ஆசைப்படுங்கள் ஆணையிடுங்கள்". வழக்கம் போல இந்த வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி நேயர தேர்ந்தெடுத்து அவரோட எட்டு ஆசைகள நிறைவேற்றி வைக்கிறோம்.. அந்த வகைல இந்த வார அதிர்ஷ்ட்சாலி நேயர் சசி American Teddy Bear la தொடங்கி அவரோட முதல் ஏழு ஆசைகளையும் அவரோட காதல் மனைவி அனன்யாவுக்காக கேட்ருக்கார். இப்போ அவரோட எட்டாவது ஆசை,
சொல்லுங்க சசி இந்த நிகழ்ச்சிக்கான உங்களோட கடைசி ஆசை என்ன??
வெட்க்கப்பட்டுக் கொண்டே கேட்டான் சசி "என்னோட அனன்யாவோட எடைக்கு எடையா அவளுக்கு பிடிச்ச Cadburys Diarymilk வேணும் சார்"....
புன்னகை தவழ அந்த பிரம்மாண்ட தராசில் அமர்ந்து கொண்டிருந்தாள் அனன்யா.....
Sunday, August 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கதை அருமை...
ஆனால் கதை கண்டிப்பாக தூக்கு தண்டனைக் கைதியைப் பற்றி பேசைல்லை என தெரிந்துவிட்டது... ஏனென்றால் தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு கடைசி ஆசை ஒரு சில நாட்க்களுக்கு முன்னரே கேட்கப்பட்டுவிடூம்...
Thanx Thala.... But Enakku athu theriyathu... Etho feel kondu varanumgrathukkaga Try pannathu... Anyway Leeemmee try sumthing better Next....
நல்லாத்தான் இருந்தது.
ஆனா கடைசில முடிக்கும் போது ஒரு ட்விஸ்ட் குடுத்திருக்கலாம். Cadburys Diarymilk க்கு பதிலா, எடைக்கு எடை அவளுக்கு பிடிச்ச நெக்லஸ் கேட்டிருக்கலாம்.
நாங்க பெருசுங்க இப்படித்தான் யோசிப்போம்.
வாழ்த்துக்கள்.
சோகமா ஆரம்பிச்சி 'அட!" என்று புருவம் உயர்த்தி வியக்கிற அளவுக்கு முடிஞ்சிருக்கு..வித்தியாசமாத்தான் இருக்கு வாழ்த்துகள் ராம்குமார்!
ஷைலஜா
நன்றி Bad New India மற்றும் ஷைலஜா.... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..... நெக்லஸ்லாம் குடுத்தா டி.வி கம்பெனி காரங்க முக்காடு போட்டுட்டு போக வேண்டியதுதான்.... பாவம் இல்லீங்களா????
Post a Comment